`பாஜகவுக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் 500 காேடி நிதி' - ஈ.வி.கே.எஸ் இளங்காேவன் குற்றச்சாட்டு!

கர்நாடக தேர்தலுக்காக பாஜகவுக்கு இ.பி.எஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் 500 காேடி நிதி காெடுத்துள்ளார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்காேவன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஈ வி கே எஸ் இளங்காேவன்

கரூர் மாவட்டம் புலியூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்காேவன் வந்திருந்தார். நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பல்கலைக்கழக மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் சென்ற நிர்மலாதேவி மீது ஒரு நபர் கமிஷன் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது என தெரிய வேண்டும். கவர்னருக்கும் - நிர்மலா தேவிக்கும் உண்மையிலேயே தொடர்பு இருக்குமேயானால், கவர்னர் பதவி விலக வேண்டும். மோடி உடனடியாக கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருடனை நீதிபதியாக அமர்த்துவது போல கவர்னரே தனி நபர் கமிஷனுக்கு ஆள் அமர்த்துவது போல் உள்ளது.

மாவோயிஸ்டுகள் யாரை கொன்றாலும், கொள்வேன் என கூறினாலும் அது தவறானது. அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால், ராகுல் காந்தி தான் முடிவு எடுத்து அறிவிப்பார். தமிழகத்தில் அதிமுக அரசின் செயல்பாடு ஜீரோதான். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தூத்துக்குடி சம்பவம் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சமமானது. தமிழகத்தில் காவல்துறை ஆளும் கட்சியின் கலெக்சன் துறையாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா தேர்தல் செலவுக்காக பிஜேபிக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் 500 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!