`எடப்பாடி பழனிசாமி அச்சத்தில் இருக்கிறார்' - காரைக்குடி பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் தாக்கு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காரைக்குடியில்  காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ப.சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ கே.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சுந்தரம், ராஜசேகரன், ராம.அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ப.சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

சிதம்பரம்

கூட்டத்தில் பேசிய சிதம்பரம்,  ``மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறது. இவர்களின் சாதனை இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி, ஏற்றுமதி, தனியார் முதலீடு, அந்நிய செலாவணி எல்லாம் வீழ்ச்சியடைந்தது தான். தமிழகத்தில் ஐம்பதாயிரம் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் அச்சத்தில் இருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி சட்டமன்றத்தில் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லும் முதலமைச்சர் இருந்தால் என்ன, போனால் என்ன. அப்படிப்பட்ட அரசு நமக்குத் தேவையில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடப்பாடி இருக்கிறார். 

மோடி அரசு காரின் மூன்று வீல் பஞ்சரான அரசாக இருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியின் இந்தியையும், இந்துவத்தையும் ஒருபோதும் காலூன்றவிடமாட்டோம். பிஜே.பி தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. இந்த ஆட்சியில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பட்டியலின மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். மக்களின் உரிமைகளைப் பறிக்க கூடிய அரசாக பி.ஜே.பி இருக்கிறது. கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்த போது 48 சதவிகிதம் மக்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட மிக மோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!