`நான் மட்டும் என்ன படித்துவிட்டேன்?' - சர்ச்சையை ஏற்படுத்தும் குமாரசாமி பேச்சு!

கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜி.டி.தேவகவுடா படிப்பு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குமாரசாமி

நீண்ட  ஆலோசனைக்குப் பிறகு கர்நாடக அமைச்சரவை கடந்த புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 25 பேர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் 14 பேரும், மஜத சார்பில் 9 பேரும், பகுஜன் சமாஜ் மற்றும் கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சிகளை சேர்ந்த தலா 2 பேரும் அமைச்சரானர். இதற்கிடையே, முக்கிய துறையான கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சராக மஜத கட்சியைச் சேர்ந்த ஜி.டி. தேவேகவுடா நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் சர்ச்சை எழுந்தது. காரணம் ஜி.டி.தேவகவுடா 8ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்பது தான். வெறும் 8ம் வகுப்பு படித்தவரை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கக் கூடாது என முதல்வர் குமாரசாமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இதற்குக் குமாரசாமி பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``நான் மட்டும் என்ன படித்துவிட்டேன்?. நான் முதல்வர் ஆகப் பணிபுரிகிறேனே. நான் வேண்டுமானால் அவருக்கு நிதித் துறை கொடுக்கவா?. சிலருக்கு சில துறைகளில் பணியாற்ற விரும்புவர். ஆனால் ஒவ்வொரு துறையிலும் திறமையாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. அதில் தான் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். சில அமைச்சகங்களில் நமக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் அதனைக் கட்சிகள் தான் முடிவு செய்ய முடியும். எனப் பேசியுள்ளார். இவரது பேச்சு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, குமாரசாமி ஒரு பி.எஸ்.சி. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!