ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு!

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க  சென்ற பிரதமர் மோடி, இன்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்தார். 

மோடி

சீனாவின் கடற்கரை நகரமான கிண்டாவ் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாள்கள் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழு நேர உறுப்பினராக இணைந்த பிறகு முதன் முறையாக பங்கேற்கிறது. சுமார் 17 வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இந்தியா சீனா போன்ற பெரிய நாடுகள் உள்ளதால், உலக அளவில் இது முக்கிய கூட்டமைப்பாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறைப் பயணமாகச் சீனா புறப்பட்டுச்  சென்றார். 

இன்று இரண்டாம் நாள் மாநாடு தொடங்குவது முன்பாக சீன பிரதமர், உறுப்பு நாட்டுத் தலைவர்களை வரவேற்றார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்துக்கொண்டனர். அதன் பின்னர் தொடர்ந்து மாநாடு நடைபெறுகிறது. மாநாடு முடிந்த பின்னர் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உறுப்பு நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கூட்டாக பத்திரிகை சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர். 

மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து இருநாடு உறவுகள் குறித்தும். எல்லை பிரச்னை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் இரவு பிரதமர் மோடி அங்கிருந்து இந்தியா புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!