”தமிழக அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை முறிக்கிறது” -வைகோ குற்றச்சாட்டு!

வைகோ

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில்  காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது அரசு.

தனியார் தொலைக்காட்சி  கோவையில்  நடத்திய கருத்தரங்கத்தில் திமுக, கம்யூன்ஸ்ட், பா.ஜ.க ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.  இதில் இயக்குநர் அமீர் தனது கருத்தைப் பதிவு செய்ய முயன்றபோது பாஜக, இந்து முன்னணி தொண்டர்கள் தாக்க முயன்றது கண்டிக்கத்தக்கது. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் மீது பிணையில் வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? பத்திரிகை சுதந்திரம் இல்லையா? தமிழக அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை முறிக்கிறது மக்கள் கோபத்தில் உள்ளார்கள், பத்திரிகை துறையினரின் வெறுப்புக்கு ஆளாகாதீர்கள். 

டெல்டா மாவட்டங்களில்  ஜீன் 12-ல் குறுவை சாகுபடிக்காக காவிரி நீர் திறக்க மாட்டார்கள் என முன்பே கூறினேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது கர்நாடகாவிற்கு சாதமாக அமைந்துள்ளது.  புதிய அணை, அணை பாதுகாப்பு, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்துவது என எதுவும் இல்லாமல் அதிகாரமற்ற அமைப்பாகக் காவிரி மேலாண்மை வாரியம் உள்ளது. இதே போல் உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணை குறித்து, 3 கோடி மக்கள் பாதுகாப்பு முக்கியம், பேரிடர் மேலாண்மை அமைக்க உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் உள்ளிட்டோர்  ஆய்வு செய்து, அணை  வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் இதற்காகத் தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!