வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (10/06/2018)

கடைசி தொடர்பு:13:27 (10/06/2018)

"திமுக வில் இருப்பவர்கள் பதவிக்காக இருக்கிறார்கள்" -திருமண விழாவில் அழகிரி பேச்சு!

மு.க.அழகிரியின் விசுவாசிகளில் முதன்மையானவரான பி.எம். மன்னனின் மகள் திருமணம் இன்று மதுரை வேலம்மாள் மஹாலில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தங்க தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி.சித்தன், திரைப்பட இயக்குநர் பாலா, விஜயகுமார், சமுத்திரக்கனி, சூரி, ஆர்.கே.சுரேஷ், பா.ஜ.க. அரசகுமார் என அரசியல் மற்றும் திரையுலகத்தினர் கலந்து கொண்டனர். 

Azakiri

காலை11 மணிக்கு மு.க.அழகிரி, அவர் மனைவி காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் மண்டபத்துக்கு வந்தனர். அழகிரி தாலியை எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெற்றது.

பின்பு மணமக்களை வாழத்த மைக் பிடித்த அழகிரி, "என்னுடன் இருப்பவர்களில் முக்கியமானவர் மன்னன். இவர் பதவிக்காக என்னுடன் இருந்ததில்லை. இப்பொழுது தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள். பல இடைத்தேர்தகளில் திமுக வெற்றி பெற பாடுபட்டவர் மன்னன். அவருடையை இன்ஷியல் பி.எம். அப்படியென்றால் பிரைம் மினிஸ்டர் ஆகும் தகுதி பெற்றவர்.  ஆனால், அவர் அதற்கெல்லாம் ஆசைப்பட்டதில்லை. அவர் டி.எம்.தான். முன்னாள் டெபுடி மேயர். மணமக்கள் மன்னன் போல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று குஷியாக பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க