`ரூ.10,000 மட்டுமே’ - ஓ.எல்.எக்ஸில் விலைக்கு வந்த கேரள காங்கிரஸ் அலுவலகம்!

கேரள காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு என ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் பதியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு என ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் பதியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்

கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி ராஜயசபா தேர்தல் நடக்கிறது. கேரளத்தில் ஆளும் சி.பி.எம். கூட்டணிக்கு 2 சீட்டுகளும், எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கும். சி.பி.எம். கூட்டணி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். காங்கிரஸ் சார்பில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-எம் கட்சியை சேர்ந்த ஜோஸ்.கே.மாணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைமை மீதுள்ள கோபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவன் விற்பனைக்கு என அனீஸ் என்பவர் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். விலை ரூ.10,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

மேலும் காங்கிரஸ் அலுவலகத்தின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், தேவைப்படுபவர்கள் முஸ்லீம் லீக் அல்லது கேரள காங்கிரஸ் கட்சியை தொடர்புகொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட் கூட்டணி கட்சிக்கு கொடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகம் விற்பனைக்கு என விளம்பரம் வந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!