வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/06/2018)

கடைசி தொடர்பு:19:30 (10/06/2018)

`முகத்தைச் சிதைத்து கொலை செய்தது இதனால்தான்!’ - கொலையாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்

மூன்றாவதாக என்னோடு வாழ்ந்த அவள், எனக்குத் துரோகம் செய்ததால் அவளுக்கு அளவுக்கதிகமாக அந்த மாத்திரைகள் கொடுத்துக் கொன்றேன் என முருகன் சொன்ன வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்துக்கிடக்கின்றனர்.

மலர் கொடி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த தச்சமலை வனப்பகுதியில் கடந்த 29-ம் தேதி, சுமார் 25வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸார் மற்றும் வனத்துறையினர் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் இறந்த பெண்ணின் உடல் அருகே, ஆடைகள் கிடந்ததும், முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. முதலில் பெண்ணை வனப்பகுதிக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து விட்டு, பின்னர் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். அதையடுத்து, திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல்ஹக், மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ஆசைதம்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர் மற்றும் தனிப்படை அமைக்கப்பட்டது. இறந்த பெண் குறித்து தகவலறிய, அவரின் உடல் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தினர். முகம் சிதைக்கப்பட்டிருந்ததால், இறந்தப் பெண் குறித்து தகவல் அறிய போலீஸார் திணறிப் போனார்கள்.

இறந்த பெண்ணின் புகைப்படங்கள் மூலம் ஒருவாரத்துக்குப் பிறகு அந்தப் பெண், திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள நந்தவனம்பட்டியைச் சேர்ந்த மலர்கொடி என்பது தெரிந்தது. அடுத்தடுத்த விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.

போலீஸார் விசாரணையில் முருகன் கொடுத்த வாக்குமூலங்கள் அனைத்தும் அதிர்ச்சிரகம்.. முருகன் வாக்குமூலம்: 

“மலருக்குச் சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி. அவ நத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தாள். அந்த சூப்பர் மார்கெட் பக்கத்தில் இருந்த கோழிப்பண்ணையில் வேலை நான் வேலைப்பார்த்தேன். எனக்கு சிவகங்கை மாவட்டம் மு.அம்மாபட்டிதான் சொந்த ஊர். என் மனைவி மலர்மணி மூலம் அவள் எனக்கு அறிமுகம். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அதுக் காதலாக மாறியது. அடுத்து அவளை காரியப்பட்டியில் குடித்தனம் வைத்து, இருவரும் கணவன், மனைவி போல் தனியாக வாழ்ந்து வந்தோம். அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது. முதலில் அவரின் கணவர் இறந்துவிட்டதாகக் கூறினாள் அதை ஏற்றுக்கொண்டேன். நாளடைவில் அவளது நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தது.

முருகன்அடுத்து அவளின் உண்மைகள் தெரிந்தது. அவளுக்கு ராமர் என்பவருடன் முதலில் கல்யாணம் ஆச்சு. அதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். ஆனால் ராமரிடமிருந்து பிரிந்த மலர் மணிகண்டனை என்பவரைக் கல்யாணம் செய்து வாழ்ந்தார். அவங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணிகண்டன் இறந்துவிட்டார். அதன்பிறகு பெண் குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்தவிட்டு, தனது ஆண் குழந்தையுடன் துபாய் சென்ற மலர், அங்கு வேலை செய்தவர், வேலைப் பிடிக்காததால், ஊருக்கு வந்து, திண்டுக்கல் நத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்ததும். என்னைப் போல் பல ஆண்களிடம் பழகி வருவதும் தெரிந்தது. இதை தட்டிக் கேட்ட என்னிடம் சண்டைப் போட்டதுடன், இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருப்பதாகக் கூறி, அதை எனது குடும்பத்தாருக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி பணமும் கேட்டு மிரட்டினாள்.

நாங்கள் ஒரே வீட்டில் குடியிருந்தாலும், சந்தோசமாக இருக்க, பாரஸ்ட் பக்கம் ஒதுங்குவோம். அங்க போய் உல்லாச மாத்திரைகள் வாங்கி அதைப் பயன்படுத்தி, உற்சாகமாக இருப்பது வழக்கம். என்னை பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதால் மலர்கொடியை தீர்த்துக் கட்ட நினைத்தேன். அதனையடுத்து, கடந்த மே மாதம் 27-ம் தேதி, ஜாலியாக வெளியே போகலாம் எனக் கூட்டிக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். இருவரும், துவரங்குறிச்சி தச்சமலை காட்டுப்பகுதிக்கு போனோம். அங்கு அவளுக்கு உல்லாசத்துக்காகப் பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகளைக் கொடுத்து, அவளுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போதும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், மலரைக் கொலை செய்து, அடையாளம் தெரியாதபடி முகத்தையும் சிதைத்து விட்டுத் தப்பி வந்தேன். கடைசியில் மலர்கொடியின் போட்டோவை டிவியில் பார்த்த என் மனைவி மலர்மணி மற்றும் அவரது தோழிகளான, சரோஜா மற்றும் ஷீபா ஆகியோர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அடுத்தடுத்து நூல் பிடித்த போலீசார் என்னைப் பிடித்துவிட்டார்கள்’’ எனக் கூறியதுதான் அதிர்ச்சி.முருகன் இப்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பமும், மலர்கொடியின் குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்பதுதான் பரிதாபம்.