வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (10/06/2018)

கடைசி தொடர்பு:07:22 (11/06/2018)

`மக்கள் உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்...!' - ராகுல் காந்திக்கு அமித் ஷா கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சி குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விக்கெல்லாம், பதிலளிக்க முடியாது என, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

அமித் ஷா ராகுல்

Photo Credit: ANI

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூரில், `வளர்ச்சிப் பயணம்' என்ற தலைப்பில், பா.ஜ.க-வின் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, `காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நான்கு ஆண்டுகளில் நரேந்திர மோடி என்ன செய்தார் என்று கேட்கிறார். ராகுலிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். `உங்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'. அதிகாரத்தில் இருக்க மக்கள் எங்களுக்கு உரிமை கொடுத்துள்ளார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று எங்களிடம் கேட்கிறீர்கள், அதே சமயத்தில் மக்களும் கடந்த 40 ஆண்டுகளாக நாட்டில் ஏன் வளர்ச்சியில்லை என்று உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். 

பாகிஸ்தான் படையினர் இரவு பகல் பாராமல் தாக்கி வருகின்றனர். பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே நமது படைகள் சென்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளனர். நரேந்திர மோடி அரசு நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாத்து வருகிறது. எனவே, மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக அரங்கில், இந்தியாவை மிகுந்த மரியாதைக்குரிய நாடாக மாற்றியுள்ளது' என்று பேசினார்.