வெள்ளப் பெருக்கிலும் திற்பரப்பு அருவியில் ஆனந்தக் குளியல்போட்ட சுற்றுலாப் பயணிகள்!

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீர் குறைவான பகுதியில் கயிறு கட்டி சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

திற்பரப்பு அருவி

குமரி குற்றாலம் என அழைக்கப்படுவது திற்பரப்பு அருவி. இந்த அருவிக்கு மேல் பகுதியில் களியல் தடுப்பணை உள்ளதால் இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டும் என்பதால் இதற்கு முன்பு சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பது இல்லை. குமரி மாவட்டத்தில் இப்போது பெய்துவரும் பருவமழைக் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்குப் படையெடுக்கின்றனர்.

திற்பரப்பு அருவி

ஆர்வமுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக அருவியில் குறைவாக தண்ணீர் வரும் பகுதியில் பாதுகாப்புக்காக கயிறு கட்டப்பட்டு குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுமுழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் திற்பரப்பு அருவியில் கடுமையான மழை சீசனிலும் சுற்றுலாப் பயணிகள் நம்பி வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!