பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது..!

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது.!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே  பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று தோற்ற விரக்தியில் அரிவாளால் அப்பெண்ணைச் சரமாரியாக வெட்டியவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சின்னச்சாமி

சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பராசக்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சின்னச்சாமி (38). இவர் மாற்றுத்திறனாளி. இன்று மாலை, அதே ஊரைச் சேர்ந்த பெண் தனது மாட்டிற்குப் புல் அறுக்க வயல்பகுதிக்குச் சென்றுள்ளார். அதனை அறிந்த சின்னச்சாமி, அப்பெண்ணைச் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இதனைத் தடுத்த அப்பெண்ணை தான் கொண்டுவந்த அரிவாளால் கழுத்து, கை, தலைப் பகுதிகளில் வெட்டியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தற்போது அந்தப்பெண் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னச்சாமியை சின்னமனூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் கைப்பற்றப்பட்டது. கொலை முயற்சி, பாலியல் வன்புணர்விற்கு எதிரான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!