`எங்கள் கட்சியில் மோடியும் யோகியும் மட்டுமே ஊழல் செய்யவில்லை' - பா.ஜ.க எம்.பி., சர்ச்சைப் பேச்சு! | Only PM Modi, Yogi Adityanath Incorruptible In Party says BJP MP

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/06/2018)

கடைசி தொடர்பு:07:33 (11/06/2018)

`எங்கள் கட்சியில் மோடியும் யோகியும் மட்டுமே ஊழல் செய்யவில்லை' - பா.ஜ.க எம்.பி., சர்ச்சைப் பேச்சு!

பாரதீய ஜனதாவில் பிரதமர் மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே ஊழல் செய்யாதவர்கள் என அக்கட்சி எம்பி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோடி - யோகி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் மக்களவை பா.ஜ.க எம்.பி., பிரிஜ்பூஷண் சரண். இவர், நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது,   ``எங்களது கட்சியில் பிரதமர் மோடியும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மட்டுமே ஊழல் செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.

பாஜக எம்பிஇருவருமே ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால், பா.ஜ.க-வில் உள்ள மற்ற தலைவர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் எனக் கூற முடியாது" என்று கூறினார். இவரது பேச்சு, பா.ஜ.க-வினர் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் இதே பிரிஜ்பூஷண் சரண் தான் கற்பழிப்பு சம்பவங்கள்குறித்து கருத்து கூறியிருந்தார்.

 ``கற்பழிப்பு சம்பவங்களுக்கு, இளைஞர்களின் பெற்றோர்கள்தான் காரணம்; அவர்கள் சரியாக வளர்க்காததால்தான் இளைஞர்கள் இந்த மாதிரி குற்றங்களைச் செய்கிறார்கள். குழந்தைகள் 15 வயதைக் கடந்ததும் பெற்றோர்கள் அவர்களை விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்காமல் ஜாலியாக இருக்க விடுவதால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன" இவரின் இந்தப் பேச்சு ஏற்கெனவே சர்ச்சையான நிலையில், தற்போது அவரது சொந்தக் கட்சியைப் பற்றி பேசியிருப்பது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close