குரங்கணியில் தீ வைத்தது யார்? விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல்!

குரங்கணியில் தீ வைத்தது யார்? உண்மைகளை சொல்லுமா விசாரணை அறிக்கை?!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். அதில் 23 பேர் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 அந்தச் சம்பவம்குறித்து விசாரணைசெய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா நியமிக்கப்பட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுசெய்த அதுல்யமிஸ்ரா, வனம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், தீ விபத்தில் காயமடைந்து உயிர் தப்பியவர்கள்  அனைவரிடமும் விசாரணை நடத்தினார். தனது விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில் அரசிடம் சமர்ப்பிப்பேன் எனக் கூறினார்.

இந்நிலையில், காட்டுத்தீ குறித்து டெல்லி பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. இப்படியான ஒரு சூழலில், 'குரங்கணி குறித்த விசாரணை முடிவடைந்து அறிக்கை தயாராக உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், வரும் 27-ம் தேதி அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறேன்' என அதுல்ய மிஸ்ரா சமீபத்தில் தெரிவித்தார். காட்டுத்தீ என்பது மனிதர்களால் காட்டில் வைக்கப்படும் ஒன்று என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுவரும் நிலையில், குரங்கணி காட்டுத்தீ யார் வைத்தது, அதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற உண்மையை அதுல்யமிஸ்ரா அறிக்கை வெளிக்கொண்டுவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!