தொடர்ந்து உயரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்! மகிழ்ச்சியில் விவசாயிகள் | The Mullaperiyar Dam Water Level Will water be open to go first irrigation?

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (11/06/2018)

கடைசி தொடர்பு:09:30 (11/06/2018)

தொடர்ந்து உயரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்

உயருது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்.! முதல் போக சாகுபடிக்கு நீர் திறக்கப்படுமா?

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முல்லை

கடந்த வருடம் போதிய மழை இல்லாததால், முதல் போக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஒரு போகம் மட்டுமே சாகுபடிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம், மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.  நேற்றைய கணக்கீட்டின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. அதேநேரம், வைகை அணையின் நீர்மட்டம் 35.99 அடியாக உள்ளது.  முல்லைப் பெரியாறு அணையில் 112அடி தண்ணீரும் வைகை அணையில் 28அடி தண்ணீரும் இருந்தால் முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, இந்த வருட முதல் போக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி விவசாயிகள் உள்ளனர். அதேநேரம், வைகை அணையை நம்பியுள்ள மதுரை விவசாயிகளும் இதே எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close