கர்நாடகாவில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி! இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயா நகர் தொகுதிக்கான சட்டசபைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. 

ஜெயநகர்

கர்நாடக சட்டசபைத் தேர்தல், கடந்த மே மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. ஆனால், ஜெயா நகர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த பி.என்.விஜயகுமார்,  தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் திடீரென  மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,  அந்தத் தொகுதிக்கான தேர்தல் இன்று நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக  நடந்துகொண்டிருக்கிறது. இதற்காகத் தொகுதி முழுவதும் 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  காங்கிரஸ் சார்பில், மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சௌமியாவும், பா.ஜ.க சார்பில் மறைந்த எம்.எல்.ஏ., விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் தேவ கவுடா தெரிவித்திருந்தார். 

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 104 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றபோதிலும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!