Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய அரசு பொறியாளருக்கு அ.தி.மு.க செயலாளரால் நடந்த துயரம்!

அதிமுக நிர்வாகி கந்தன்

Cuddalore: 

கடலூர் நகராட்சியில், தரமற்ற  பணிக்காக நகராட்சி இளநிலைப் பொறியாளர், கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய
பிரச்னையில், அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும், நகர துணைச் செயலாளருமான கந்தன் பொறியாளருடன் ஏற்பட்ட
வாக்குவாதத்தில், அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து நகராட்சி இளநிலைப் பொறியாளர் கொடுத்த புகாரின்
பேரில், அ.தி.மு.க நிர்வாகிமீது கடலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம், கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் நகராட்சி இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிபவர், ஜெயபிரகஷ். கடலூர் நகராட்சி சரவணன் நகரில்
ரூ.56 லட்சத்தில் அம்ருத் திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணி  தரமற்ற முறையில் நடந்து
வருவதாக,  நகராட்சி ஆணையர் சரவணன் உத்தரவின் பேரில் இளநிலைப் பொறியாளர் ஜெயபிரகாஷ், சம்பந்தப்பட்ட
கான்டிராக்டர் ரமேஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன், இதுகுறித்து கான்டிராக்டர் தரப்பில்
பேசவந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரும், நகர துணைச்  செயலாளருமான கந்தன், பொறியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்
அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பொறியாளர் ஜெயபிரகாஷ், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க கவுன்சிலர் கந்தனும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து இருவரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அரசியல் காரணமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொறியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, புதுநகர் போலீஸார், அ.தி.மு.க நிர்வாகி கந்தன் மீது நகராட்சிப் பொறியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் உள்ளிட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று அ.தி.மு.க நிர்வாகி கந்தனின் ஆதரவாளர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ-வும்,  தமிழக தொழில்துறை அமைச்சருமான எம்.சி சம்பத்தை  சந்தித்து முறையிட்டுள்ளனர்.  பொறியாளரைத் தாக்கிய அ.தி.மு.க நிர்வாகி தலைமறைவாக உள்ளார்.  ''கடலூர் நகராட்சியில் அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவம் புதியதல்ல. முன்னாள் ஆணையர் காளிமுத்து தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த சம்பவத்திலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நகராட்சி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement