கல்லூரி மாணவர்கள் 6 பேரின் உயிரைப் பறித்த ஒருநாள் விடுமுறை!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற இடத்தில்  நடந்த பேருந்து விபத்தில், 6 கல்லூரி  மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து

நேற்று விடுமுறை நாள் என்பதால், உத்தரப்பிரதேசம் சான்த் கபீர் நகரில் உள்ள  கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இரண்டு பேருந்துகளில் ஹரித்துவாருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று அதிகாலை, லக்னோ-ஆக்ரா  தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, கன்னோஜ் என்ற இடத்தில், மணவர்கள்  சென்ற ஒரு பேருந்தில்  டீசல் தீர்ந்துவிட்டது. இதனால், வழியிலேயே பேருந்தை நிறுத்திவிட்டு  மற்றொரு பேருந்திலிருந்து டீசல் பெற டிரைவர் முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாகப் பின்னே வந்த  உத்தரப்பிரதேச அரசுப் பேருந்து, மாணவர்கள் பயணம்செய்த பேருந்தின்மீது  மோதியது. இந்த விபத்தில், கல்லூரி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஓர் ஆசிரியரும், இரண்டு மாணவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!