மல்லையாவைத் தொடர்ந்து நீரவ் மோடியும் லண்டனில் தஞ்சம்?

நீரவ் மோடி பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மல்லையாவைத் தொடர்ந்து நீரவ் மோடியும் லண்டனில் தஞ்சம்?

விஜய் மல்லையாவைத் தொடர்ந்து நீரவ் மோடியும் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நீரவ் மோடி

பஞ்சாப் வங்கியில் ரூ.12,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, தலைமறைவாக உள்ளார். மோசடி குறித்த செய்திகள் வெளியான போது, நீரவ் மோடி நியூயார்க் நகரில் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், தலைமறைவாக உள்ள அவர், பிரிட்டனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் உள்துறை அமைச்சகம், 'தனிநபர் சார்ந்த விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதில்லை' என்று  நீரவ் மோடி தஞ்சம்குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.  இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தவில்லை. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உஷா ஆனந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 25 பேர்மீது சி.பி.ஐ வழக்குப் பதிந்துள்ளது. முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி, இவரின் தாய்மாமாவும் கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் உரிமையாருமான மேகுல் சோக் ஷி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதமே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளிடம் 9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!