வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (11/06/2018)

கடைசி தொடர்பு:10:35 (12/06/2018)

`ஊடக உரிமையை நசுக்கக் கூடாது' - பொன்.ராதாகிருஷ்ணன்

அமீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் இப்படித்தான் பேசுவார் எனத் தெரியாமல் நிகழ்ச்சி நடத்திய ஊடகம்மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

`அமீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் இப்படித்தான் பேசுவார் எனத் தெரியாமல் நிகழ்ச்சி நடத்திய ஊடகம் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், குமரி மாவட்ட பா.ஜ.க இளைஞரணி சார்பில் நடந்த மத்திய அரசின் நான்காண்டு சாதனை விழிப்புஉணர்வு பைக் பேரணியைத் தொடக்கிவைத்து, பேரணியில் கலந்துகொண்டார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் விதமாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம் ஆகும். கருத்துச் சுதந்திரம் இல்லாத நாடு, ஜனநாயகத்திலிருந்து நழுவிவிடும். 1975-ல் காங்கிரஸ் அரசு ஆட்சியின்போது, இந்திரா காந்தி கொண்டுவந்த எமெர்ஜென்சி போன்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது. கோவை சம்பவத்தில் இயக்குநர் அமீர் பயன்படுத்திய வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொன் ராதாகிருஷ்ணன்

ஒரு மிகப்பெரிய படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் இப்படித்தான் பேசுவார் எனத் தெரியாமல் நிகழ்ச்சி நடத்திய ஊடகம்மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஊடகங்கள், தங்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அமீர் போன்ற பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்களை ஊடகங்களில் விவாதத்துக்கு அழைக்கக் கூடாது. அதிலும், எப்போதும் பிரச்னை ஏற்படும் என்ற நிலையில் உள்ள கோவையில்,  அதுபோன்று அவர் பேசியிருக்கக் கூடாது. இனி, அமீர் போன்றவர்களை ஊடகங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கக் கூடாது" என்றார்.