இலங்கைக்குக் கடத்த இருந்த மாத்திரைகளைக் குறிவைத்துப் பிடித்த போலீஸ்!

 ராமநாதபுரம் அருகே கீழக்கரை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள வலிநிவாரணி மாத்திரைகளை க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் அருகே கீழக்கரை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள வலிநிவாரணி மாத்திரைகளைக் க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீழக்கரை அருகே பிடிபட்ட கடத்தல் மாத்திரைகள்

தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், பீடி பண்டல்கள், போதைப் பொருள்கள், மாத்திரைகள் ஆகியன கள்ளத்தனமாகக் கடத்துவதும் இவற்றுக்கு மாற்றாக இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன. இவ்வாறு கடத்தப்படும் பொருள்களைப் போலீஸார் அவ்வப்போது பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

கீழக்கரை அருகே பிடிபட்ட கடத்தல் படகு

இந்நிலையில் கீழக்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குப் போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் ராஜலெட்சுமி தலைமையிலான க்யூ பிரிவு போலீஸார் கீழக்கரை காஞ்சிரங்குடி அருகே உள்ள இடிந்த கல் கடற்கரைப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் கரையோரம் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டிரம்மடோல் - எக்ஸ் என்ற வலி நிவாரணி மாத்திரைப் பெட்டிகள் சிக்கின. இதில் சுமார் 1.49 லட்சம் மாத்திரைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.7.45 லட்சம் ஆகும். இதைத் தொடர்ந்து படகின் உரிமையாளரான இருளன் என்பவரைக் கைது செய்த க்யூ பிரிவு போலீஸார், மாத்திரையைக் கடத்த முயன்ற ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!