Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு?- பேரவையில் அதிர்ந்த முதல்வர் பழனிசாமி

பசுமை வழிச்சாலை அமைப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய முதல்வர் பழனிசாமி, சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி என்று கூறினார்.

பசுமை வழிச்சாலை

சென்னை- சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவது தொடர்பாக ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ``சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காவே அமைக்கப்படுகிறது. யாருக்கும் தனியாக சாலை அமைக்கப்படவில்லை. 41 ஹெக்டர் வனப்பகுதி மட்டுமே சாலை திட்டத்துக்காக எடுக்கப்படுகிறது. பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி. சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை அமைப்பதால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கூறுகையில், திமுக கோட்டை விட்டதை மத்திய அரசிடம் அதிமுக அரசு போராடிப் பெற்றுள்ளது. தனியாருக்காகத்தான் திமுக ஆட்சியில் சாலைகள் அமைக்கப்பட்டதா?. பசுமை வழிச்சாலை திட்டத்துக்காகக் குறைந்த அளவிலான மரங்களே வெட்டப்படுகின்றன. பசுமை வழிச்சாலை திட்டம் வனப்பகுதிக்குப் பாதிப்பு இல்லாமல் நிறைவேற்றப்படும். பசுமை வழித்திட்டம் மூலம் சென்னை- சேலம் இடையே உள்ள பயண நேரம் பாதியாகக் குறையும்" என்று தெரிவித்தார்.

பசுமை வழிச்சாலை

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை அமைப்பதனால் அதிக அளவில் விவசாய நிலங்களும் மலைகளும் பாதிக்கப்படுகின்றன. தற்போது அங்கு இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி சம்பவம் போல் ஏற்படாமல் இருக்க பசுமை வழிச்சாலை குறித்து பொதுமக்கள் கருத்தையும் கேட்க வேண்டும்" என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ``பாதிப்புகள் குறைவு பயன்கள் அதிகம் என்பதால் இந்தத் திட்டத்தை அமைப்பது அவசியமாகும். பசுமைவழி விரைவுச்சாலையைக் கடந்து செல்லும் பாதைகளில் உள்ள கிராமங்களின் பொருளாதாரம் மேம்படும். நான் சேலத்தில் இருப்பதால் தேவையில்லாத குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் சுமத்துகின்றனர்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement