வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (11/06/2018)

கடைசி தொடர்பு:15:10 (11/06/2018)

மீண்டும் திருமணம் தள்ளிப் போனது ஏன்?- 'ராஜா ராணி' ஷப்னம்

நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட 'ராஜா ராணி' ஷப்னத்தின் திருமணம் எப்போது?

'ராஜா ராணி' ஷப்னத்துக்கு கடந்தாண்டு (2017) செப்டம்பர் மாதம் ஆர்யன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எங்களுடையது 'லவ் கம் அரேஞ்ச்ட் மேரேஜ்' ஆக இருக்கும்' என்றார். இருவரும் குடியேற சென்னை வேளச்சேரியில் புதிய ஃப்ளாட் கூட ரெடியாகி விட்டது. ஆனால் ஒன்பது மாதங்கள் கடந்தும் திருமணத்துக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. முதலில் 2018 பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் அன்னைக்கு நடத்த திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது. அது நடக்கவில்லை. பிறகு ஜூன், ஜூலையில் இருக்கும் என்றார்கள். ஆனால் தற்போது இன்னும் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

ஷப்னம்

என்ன காரணம்?

''டிவி ஃபீல்டு பத்தி உங்களுக்குத் தெரியாதா? சீரியல் வாய்ப்புங்கிறது கிடைச்சா வரிசையா கிடைச்சிட்டே இருக்கும். ஒரு சிலருக்கோ ஒரு சீரியல் முடிஞ்சா அடுத்த சீரியலுக்கே மாசக் கணக்குல, வருஷக்கணக்குல ஆகலாம்.

'2017ல் என்னோட மேரேஜ்'ங்கிறது வீட்டுல எல்லாரும் கூடி எடுத்திருந்த முடிவு. ஆனா ஆர்யன் லைஃப் பார்ட்னரா சேர்ந்த நேரமோ என்னவொ என்கேஜ்மென்ட் முடிஞ்சதுமே பிஸியாகிட்டேன். தமிழ்ல ரெண்டு சீரியல்களோட, சிங்கப்பூர்ல இருந்து வெளியாகிற சீரியல், அப்புறம் சில விளம்பரங்கள்னு வரிசையாக வேலை இருந்திச்சு. இன்னொரு புறம் என்னோட சொந்த விருப்பத்துல ஆரம்பிச்ச பியூட்டி பார்லரும் சூப்பரா பிக் அப் ஆக, அதையும் கவனிக்க வேண்டியதிருக்கு. என்னோட கல்யாணம் தள்ளிப் போறதுக்கு இது மட்டுமே காரணம். ஆனா இந்த வருஷக் கடைசிக்குள்ள எப்படியும் நடந்திடும்னு மட்டும் நம்பறேன்' என்கிறார் ஷப்னம்.