ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!

சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

ஜார்ஜ்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்களுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். இவர் மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களும் ஜெயலலிதாவை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. அவர் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்கள்கூட எதுவும் வெளியாகவில்லை. அவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகப் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இவரின் ஆணையத்தில் ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு நெருக்கமாகப் பழகியவர்கள், அவர் வீட்டில் வேலை செய்தவர்கள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மற்ற துறைகளில் பணியாற்றிய அதிகாரிகள் எனப் பலரும் நேரில் வந்து ஆஜராகி தங்களின் கருத்தைத் தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது ஜூன் 13-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!