Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

டிஜிட்டல் பேமென்ட் துறையில் சில முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம்; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை 

டிஜிட்டல் பேமென்ட் துறையில் தற்போது பே டிஎம், போன் பே போன்ற சில முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது, மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும்படி ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

நாட்டில் இன்டர்நெட் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக வங்கி நடவடிக்கைகளைக் கையாளுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், சில தனியார் முன்னணி நிறுவனங்கள் இது போன்ற டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றன. தற்போது, இந்தியாவில் பே டிஎம், போன் பே, அமேசான் பே, கூகுள் டெஸ், ஃபேஸ்புக் ஆகிய குறிப்பிட்ட முன்னணி நிறுவனங்கள் டிஜிட்டல் பேமென்ட் துறையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இது மிகவும் ஆபத்தான விஷயம். எனவே, பொதுமக்கள் விழிப்பு உணர்வுடன் இருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், நிதித்துறையில் நிலைத்தன்மை பாதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. 

டிஜிட்டல் பேமென்ட் துறையில் மேலும், பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊக்குவித்தும் வருகிறது. இதன் காரணமாக இத்துறையில் பல தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும், ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவும். இது தொடர்பாக வரும் செப்டம்பர் 30-ம் தேதி ரிசர்வ் வங்கி புதிய கொள்கையை வெளியிட உள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கையாண்டு வருகின்றனர். இது இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட வழிவகுத்தன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை நேரத்தில் பே டிஎம் அதிகளவில் பயன் அடைந்தது. தற்போது, ஃபேஸ்புக் இத்துறையில் நுழைந்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட திட்டமிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் அதிகளவில் விரும்பும் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமாக பே டிஎம் உருவெடுத்தது. இந்நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் மட்டும் 19 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 

இதற்கு அடுத்தபடியாக இ காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் நிறுவனம் 6.29 பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எஸ் பேங்க் 22 சதவிகித பங்களிப்பைக் கொண்டு 4.24 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. எஸ் பேங்க் பிளிப்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான போன் பே மூலமாக இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் பேமென்ட் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், இந்தியாவில் நடந்துள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்குள்ள சர்வரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement