`இப்படியும் அனுதாபம் தேடுவதா?’ - பிரதமர் மோடியை விளாசும் சரத்பவார்

பிரதமரைக் கொல்வதாக வந்த கடிதத்தை வைத்து மோடி மீது அனுதாபம் தேடுவதாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். 

சரத் பவார்

மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற, கோரோகான் போரின் 200 வது ஆண்டு விழா அனுசரிப்பின்போது நடந்த கலவரத்துக்கு காரணமான சிலரை கைது செய்து அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், ‘ராஜீவ் கொலை போன்ற மற்றொரு நிகழ்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என மகாராஷ்ட்ரா காவல்துறை கூறியது. எனவே, அவர்களால் தற்போது பிரதமராக உள்ள மோடியின் உயிருக்கு ஆபத்து எனக் கருதி அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், புனேவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ‘பிரதமரை கொலை செய்வதாக வந்த கடிதம் குறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவரிடம் நான் பேசினேன். இது போன்ற கடிதங்கள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என அவர் கூறினார். இந்த ஒரு கடிதத்தை வைத்து பா.ஜ.க-வும் மோடியும் மக்களிடம் அனுதாபம் தேட முயல்கின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!