மூணாரில் கடும் நிலச்சரிவு! போக்குவரத்து துண்டிப்பு; வீடுகள், கடைகள் சேதம்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இடுக்கி மாவட்டம், மூணாரில் இன்று மதியம் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கடைகள் பலத்த சேதம் அடைந்தன.

மூணாரில் நிலச்சரிவு

உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சாலைகளில் மரங்கள், பாறைகள் விழுந்துள்ளதால் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் என்றால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்துள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்
122 அடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தொடர்மழை காரணமாக இரண்டு நாள்களுக்கு முன்னர், குமுளி சாலையில், மாதா கோயில் அருகில் மரம் சாலையில் விழுந்தது. இதனால் சில மணி நேரம் இரு மாநிலப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!