`தாஜ்மஹாலின் பெயரை இப்படி மாற்றிவிடுங்கள்!’ - சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ

தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால், கிருஷ்ணா மஹால் அல்லது சிவாஜி மஹால் என மாற்ற வேண்டும் என்று கூறி உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

சர்ச்சை எம்.எல்.ஏ

Photo Credit: ANI

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைரியா தொகுதி எம்.எல்.ஏ-வான சுரேந்திர சிங், தனது கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். சமீபத்தில் அரசு அதிகாரிகளைப் பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்தநிலையில், தாஜ்மஹாலின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

தாஜ்மஹாலின் பெயர் மாற்றப்பட வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சுரேந்திர சிங், அதன் பெயரை ராம் மஹால், கிருஷ்ணா மஹால் அல்லது சிவாஜி மஹால் என மாற்ற வேண்டும் என்று பதிலளித்து பகீர் கிளப்பியிருக்கிறார். அதேபோல், முகலாயர்கள் கால நினைவுச் சின்னங்கள் குறித்து பேசிய அவர், அந்தக் கட்டடங்களை இடித்துத் தள்ளக் கூடாது. ஏனென்றால் அவை இந்திய மண்ணில் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் பெயர் மட்டுமே மாற்றப்பட வேண்டும். அதற்கு பெயர் மாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், நான் ராஷ்டிர பக்த மஹால் எனப் பெயர் மாற்றம் செய்துவிடுவேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!