மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

மருத்துவப்படிப்பு

தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. திருவாரூரில் உள்ள  அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் விண்ணப்பத்தை வாங்குவதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். முதல் விண்ணப்பத்தைத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் வழங்கினார். இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.

அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பம் கட்டணம் 500 ரூபாய் எனவும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,000 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. www.tn health.org, www.tn medical selection.org ஆகிய இணையதளங்களிலும் விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிடியுடன் சேர்த்து 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!