வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (11/06/2018)

கடைசி தொடர்பு:18:56 (11/06/2018)

மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வுத்தாள் - தமிழக அரசு!

பதினொன்று, பன்னிரண்டாவது வகுப்புகளில் மொழிப் பாடங்களில் நடத்தப்படும் தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் மொழிப்பாடங்களில் நடத்தப்படும் தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மொழிப்பாடம்


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நடந்துவருகின்றன. சமீபத்தில் மாணவர்களின் மன உளைச்சலையும் ஏற்றத்தாழ்வுகளையும் தவிர்க்கும் வகையில் முதல்இடம், இரண்டாம் என்ற பாகுபாடுகள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 10, 12 வது வகுப்பைப்போல 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. புதிய பாடத்திட்ட மாற்றங்களும் அரங்கேறின. அந்த வகையில் தற்போது தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 11வது, 12வது மொழிப்பாடங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை தமிழ்தாள் 1, தமிழ் தாள் 2 என்றும் அதேபோல ஆங்கிலம் தாள் 1, ஆங்கிலம் தாள் 2 என்றும் இரண்டு தேர்வுகள் தனித்தனியே நடத்தப்பட்டு வந்தன. தற்போது பள்ளிக் கல்வித்துறை அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, இனி 11வது 12வது மொழிப்பாடங்களுக்குத் தனித்தனி தேர்வுகள் கிடையாது என்றும் இனி ஒரே தேர்வுதான் நடத்தப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.