சுடுகாட்டுப் பாதை பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன ஆர்ப்பாட்டம்!

அரசின் சார்பாக அமைக்கப்பட்ட மயான பாதையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், அதனைச் சரி செய்து தரக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அரசின் சார்பாக அமைக்கப்பட்ட மயான பாதையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், அதனைச் சரி செய்து தரக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

நூதன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள எட்டிச்சேரி கிராமத்தில் 50 அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக மயானம் ஏற்படுத்தப்பட்டு தார்ச்சாலையும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்தச் சாலையை தனியார் சிலர் ஆக்கிரமித்தனர். அதனால், அந்த வழியாகப் பிணங்களை எடுத்துச் செல்ல விடாமல் பிரச்னை செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதன் காரணமாக ஒவ்வொரு முறை இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போதும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் காவல்துறையின் பாதுகாப்புடனேயே உடலை அடக்கம் செய்யும் நிலை இருந்து வருகிறது. எனவே, மயானப் பாதையை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் சுமுகத் தீர்வு ஏற்படுத்தித் தர வலியுறுத்தி திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

மயானப் பாதையின் ஆக்கிரமைப்பை அகற்ற வேண்டும் என்றும் அந்தச் சாலை தெளிவாகத் தெரியும் வகையில் அறிவிப்பு பெயர்ப் பலகை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பங்கேற்றவர்கள் கொள்ளிப்பானையுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!