`மதுரையைக் கலங்கடிக்கும் இருதரப்பு பகை!’ - அச்சத்தில் மக்கள்

மதுரை கீரைத்துரை அருகே வீட்டுக்குள் வெடிகுண்டு தயாரித்தபோது

மதுரை கீரைத்துரை அருகே வீட்டுக்குள் வெடிகுண்டு தயாரித்தபோது,  குண்டுகள் வெடித்ததால் முனியசாமி, நரசிம்மன் ஆகியோர் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் தொடரும்

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்திருப்பவர்கள் தி.மு.க பிரமுகரான வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள் ஆகும். மதுரை கீழ்மதுரைப்பகுதியில் முன்னாள் மண்டலத் தலைவர்களான வி.கே.குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் இடையே இருபது வருடங்களாகப்  பகை வளர்ந்து, இரண்டு தரப்பும் பழிக்குப் பழியாக கொலை செய்து வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் வேலுகுமாரை ராஜபாண்டி தரப்பு வெட்டிக் கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் குற்றவாளிகள் சரணடைந்த நிலையில், அதற்கு பதிலடியாக ராஜபாண்டி தரப்பை கொல்வதற்கு, குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமி, நரசிம்மன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்துகொண்டு நேற்று  நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளார்கள். அந்த நேரத்தில்தான் குண்டு வெடித்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்துள்ள முனியசாமி, சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வேலுகுமாரின் சகோதரர் ஆவார். அவர்கள் வீட்டை காவல்துறை சோதனையிட்டபோது வெடிக்காத ஐந்து நாட்டு வெடிகுண்டுகளையும், வெடி மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர். முடிவுக்கே வராத இரண்டு தரப்பினரின் பழிக்குப் பழி செயல்பாடுகளால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மதுரை மக்கள்  வாழ்ந்து வருகின்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!