`குளிர்பானத்தில் மயக்க மருந்து..போதை ஊசி!' - இளைஞர்களால் மாணவிக்கு நடந்த கொடூரம்

இளம் பெண்ணை பதினெட்டு இளைஞர்கள் பாலியல். வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இளம் பெண்ணை 18 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. 

வன்கொடுமை

திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்கிறார். அந்தப் பெண்ணின் நண்பர் அருண் என்பவர், அவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது அருணின் நண்பர்கள் இதைப் பார்த்துள்ளனர். இதை வைத்து அவரை மிரட்டி வந்துள்ளனர். அடிக்கடி தனித்தனியாகச் சந்தித்த நண்பர்கள், பள்ளிக்குச் செல்லும்போது அவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக 18 இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அது தவிர போதை ஊசி, கஞ்சா போதை மாத்திரை கொடுத்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால், பள்ளிக்குப் போகாமல் இருந்த அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரின் தந்தை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தியிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் எஸ்பி அலுவலகத்தில் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இளைஞர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் திருவள்ளூர் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!