`எஸ்.வி.சேகர் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை' - மாஃபா பாண்டியராஜன் சப்போர்ட்!

எஸ்.வி.சேகர் மிகப்பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் மிகப்பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மாஃபா


நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்குப் பல்வேறு அமைப்பினரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பதிவை சமூகவலைதளங்களிலிருந்து எஸ்.வி.சேகர் நீக்கினார். இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்கள் நீண்டு கொண்டேயிருந்தன. இதன் ஒருபகுதியாகப் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் எஸ்.வி.சேகர்மீது புகார் அளித்ததின் பேரில் அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் தலைமறைவானார். மேலும், மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்வில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டதாக வெளியான வீடியோ காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவல்துறை எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காலம் தாழ்த்திவருவதாகப் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. காவல்துறையினர் கைதுசெய்யாமல் காலம் தாழ்த்திவருவதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், எஸ்.வி.சேகர் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!