`எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது!’ - ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்துருஜி | Political conspiracy is on me says pondicherry ATM fraud accused Chandruji

வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (11/06/2018)

கடைசி தொடர்பு:21:43 (11/06/2018)

`எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது!’ - ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்துருஜி

புதுச்சேரியில் தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி சந்துருஜி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏடிஎம்

ஸ்கிம்மர் கருவி மூலம் பொதுமக்களின் ஏடிஎம் கார்டுகளின் எண்களைத் திருடி, அதன்மூலம் போலி ஏடிஎம் அட்டைகளைத் தயாரித்து கோடிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்தக் கும்பலை புதுச்சேரி சிபிஐடி போலீஸார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்த சந்துருஜி மற்றும் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த சத்யா இருவரையும் சிபிஐடி போலீஸார் தேடி வந்தனர். `பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து என சர்வதேச அளவில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பிருக்கிறது. முக்கியக் குற்றவாளியான சந்துருஜி சுமார் 90 சிம் கார்டுகளைப் பயன்படுத்திப் பேசி வருகிறார் என்றும், தான் தங்கும் இடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றும் புதுச்சேரி காவல்துறை தெரிவித்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

கொள்ளை

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தலைமறைவாக இருந்த சத்யாவை போலீஸ் கைது செய்தது. சந்துருஜியை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று காவல்துறை கூறி வந்த நிலையில், மும்பையில் வைத்து சந்துருஜியை புதுச்சேரி சிபிஐடி போலீஸ் கைது செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் தன் மீது எந்த குற்றமும் இல்லை எனக் கூறி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில், தனக்கு எதிராக பாண்டிச்சேரியில் அரசியல் சதி நடப்பதாகக் கூறியுள்ள சந்துருஜி, சட்ட ரீதியாக தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும், தான் சம்பாதித்த பணம் எல்லாம் அரசுக்கு வரி செலுத்தி முறையாகச் சேர்த்தே என்றும் கூறியிருக்கிறார். தலைமறைவாக இருக்கும் சந்துருஜி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close