`அவதூறு கருத்து குறித்த வழக்கில் நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன்!' - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 எஸ்.வி.சேகருக்கு சம்மன்


பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சித் தலைவர்கள். பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்டவை எஸ்.வி.சேகரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து எஸ்.வி.சேகர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரை கைது செய்ய தடையில்லை எனவும் தெரிவித்தது. காவல்துறை எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தததற்கு பாரபட்சம் பார்க்கிறீர்களா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், சைபர் கிரைம் போலீஸார் செய்த வழக்கு பதிவின் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்றம்  உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி வருகின்ற 20-ம் தேதி காலை 10 மணி அளவில்  நடிகர் எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!