நெல்லையில் பருவமழை தீவிரம்: நிரம்பும் அணைகளால் விவசாயிகள் மகிழ்ச்சி!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை கரணமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கொடுமுடியாறுய் அணை முழுமையாக நிரம்பி வழிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை கரணமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. பருவமழை தீவிரமாக இருப்பதால், கொடுமுடியாறு அணை முழுமையாக நிரம்பி வழிகிறது. 

பருவமழை - கொடுமுடியாறு அணை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் மாவட்டத்தின் பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, 143 அடி கொள்ளவு கொண்ட பாபாநசம் அணையின் நீர்மட்டம் நேற்று 51 அடியாக இருந்தது. ஆனால், நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 61அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 4,532 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

மேலும், 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65 அடியில் இருந்து ஒரே நாளில் 26 அடி அதிகரித்து 91.53 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,219 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன், 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்;மட்டம் 76 அடியில் இருந்து 5 அடி அதிகரித்து 81 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,996 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இதுதவிர, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், அணையானது முழு கொள்ளளவான 56 அடியை எட்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரையிலும் 12 அடி மட்டுமே நீர் இருந்த நிலையில் தற்போது அணை நிரம்பி இருக்கிறது. அதனால் அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் வள்ளியூரைச் சுற்றிள்ள பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!