குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 3 பேர் பலி - 36 வீடுகள் இடிந்தன!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர்.

ன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழையுடன் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் இறந்துள்ளனர்.

இறந்தவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. மழையுடன் சூறாவளிக் காற்றும் கடந்த  சிலதினங்களாக சேர்ந்துகொண்டது. இதனால் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் தோட்ட வேலை செய்த கொண்டிருந்த துரைராஜ், மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி மரணமடைந்தார். நித்திரவிளை அருகே செம்மான்விளை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலையன் (வயது 67), அதிகாலை 5 மணியளவில் பால் வாங்கச் சென்றபோது ரோட்டில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்திருக்கிறார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்று அருமனை அருகே குழிச்சல், நெடுமங்காலவிளையைச் சேர்ந்த ரப்பர்பால் எடுக்கும் தொழிலாளி அகஸ்டின் (36) பைக்கில் சென்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார். வீட்டில் பசு வளர்த்துவந்த அகஸ்டின் ரப்பர் தோட்டத்தில் புல் அறுத்து எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டுவந்திருக்கிறார்.

முறிந்த மரங்கள்

மிகவும் கரடுமுரடான பாதையில் கால்களை தரையில் ஊன்றியவாறு பைக்கில் சென்றிருக்கிறார். மழையில் அறுந்துவிழுந்த மின்கம்பியை கவனிக்காமல் சென்றதால் அகஸ்டினின் காலில் மின்சாரம் பாய்ந்ததால் மயங்கி விழுந்தார். அவரை தொடர்ந்து வேறு பைக்கில் சென்றுகொண்டிருந்த அவரின் சகோதரர் அகஸ்டினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போதே இறந்தார். குமரி மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளிக் காற்றில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.

இதுகுறித்து நாகர்கோவில் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் வீசிய சூறைகாற்றின் காரணமாக 3 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 33 வீடுகள் பாதியும், 3 வீடுகள் முழுமையாகவும் இடிந்துள்ளன. சுமார் 5 ஹெக்டேர் வாழை சேதமாகியுள்ளது. மணவாளகுறிச்சி பகுதியில் சுமார் 3 ஹெக்டேர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சுமார் 38 மரங்கள் முறிந்துள்ளன. மரவள்ளிக்கிழங்கு, ரப்பர் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!