`5 கரடிகளுடன் திகில் போராட்டம்; பறிபோன தொழிலாளியின் கண்கள்’ - எஸ்டேட்டில் நடந்த துயரம்!

மாறாமலை பகுதியில் சென்றபோது 5-க்கும் மேற்பட்ட கரடிகள் ஒன்றுசேர்ந்து ஞானசேகரை வழிமறித்திருக்கிறது. பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஞானசேகரை கரடிகள் விரட்டித் தாக்கியுள்ளன. கரடிகளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவர் அலறியிருக்கிறார். எஸ்டேட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் கம்புகளால் கரடிகளை விரட்டிவிட்டு ஞானசேகரை மீட்டனர்.

ன்னியாகுமரி மாவட்டம் மாறாமலை கிராம்பு எஸ்டேட்டில், தொழிலாளி ஒருவரை 5 கரடிகள் தாக்கியதில், இரண்டு கண்களும் பறிபோன நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

ஞானசேகர்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் (38). இவர், கன்னியாகுமரி மாவட்டம் அச்சன்காடு பகுதியில் வசித்துவருகிறார். அவர், மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இன்று காலை 6 மணியளவில், அச்சன்காவிலிருந்து மாறாமலை எஸ்டேட்டுக்கு வேலைக்கு பைக்கில் சென்றிருக்கிறார். மாறாமலை பகுதியில் சென்றபோது, 5-க்கும் மேற்பட்ட கரடிகள் ஒன்றுசேர்ந்து ஞானசேகரை வழிமறித்திருக்கிறது. பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஞானசேகரை கரடிகள் விரட்டித் தாக்கியுள்ளன. கரடிகளிடமிருந்து தப்பிக்க முடியாமல் அவர் அலறியிருக்கிறார்.  எஸ்டேட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் கம்புகளால் கரடிகளை விரட்டிவிட்டு, ஞானசேகரை மீட்டனர்.

கரடிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி

கரடிகள் தாக்கியதில் அவரது இரண்டு கண்களும் போய்விட்டன. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வனத்துறையினர்  விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!