'கோலி சோடா -2' படக் குழுவினரின் புதிய முயற்சி!

'கோலி சோடா -2' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக GST (Goli Soda- Two) வாகனம் தமிழகத்தின் சென்னை,கோவை, சேலம், திருச்சி,மதுரை ஆகிய  நகரங்களுக்குப் பயணிக்கிறது. பயணத்தின் வழிநெடுகிலும் இளநீர்,மோர், எலுமிச்சைச் சாறு போன்றவை பாதசாரிகளுக்கு வழங்கப்படுகின்றன

கோலி சோடா

கோடிக்கணக்கான செலவில் திரைப்படங்களைத் தயாரித்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது. புதிதாக வெளிவரும் படங்களை விளம்பரப்படுத்த, ஒவ்வொரு படக் குழுவினரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வழக்கமாகிவருகிறது. இதைப்போன்றே 'கோலி சோடா-2' திரைப்படத்தையும் மக்களிடையே விளம்பரப்படுத்த படக் குழுவினர்  சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

'கோலி சோடா- 2' திரைப்படம், இயக்குநர் விஜய்மில்டனின் இயக்கத்தில் பல புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் முதல் பாகம்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 14-ம் தேதி திரைக்கு வரவிருப்பததாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோலி சோடா படக் குழுவுடன் சாலமன் பாப்பையா

கோலி சோடா -2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, GST (Goli Soda- Two) வாகனம் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய  நகரங்களுக்குப் பயணிக்கிறது. பயணத்தின் வழிநெடுகிலும் இளநீர், மோர், எலுமிச்சைச் சாறு போன்றவை பாதசாரிகளுக்கு வழங்கப்படுகின்றன. சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. சில ஆதரவற்றோருக்கான இல்லங்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கி, அடிப்படை வசதிகளையும் இக்குழு செய்துதருகிறது. மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்காக சென்னையில் கட்டப்பட்டுவரும் பாதுகாப்பு இல்லத்தின் கட்டுமானத்துக்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள் சிலவற்றையும் கோலி சோடா -2 படக்குழு வழங்கியுள்ளது.

சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்களை அழைத்து, தங்களின் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த முயற்சிக்கும் பலருக்கு மத்தியில் சமூக அக்கறையோடுகூடிய இவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!