ரெடிமேட் டாய்லெட்டுடன் கிம் ஜாங் சிங்கப்பூர் வந்தது ஏன்? அதிர்ச்சி காரணம்

பாதுகாப்பில் கிம் ஜாங் கடும் அக்கறை

ரெடிமேட் டாய்லெட்டுடன் கிம் ஜாங் சிங்கப்பூர் வந்தது ஏன்? அதிர்ச்சி காரணம்

சிங்கப்பூரில் இருந்த இரு நாள்களில் தான் உடன் கொண்டு வந்த ரெடிமெட் டாய்லெட்டைத்தான் வடகொரிய அதிபர் பயன்படுத்தியதாகத் தென்கொரிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிம் ஜாங் அன்

அமெரிக்க அதிபர்கள்கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அச்சம் கொள்ளமாட்டார்கள். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்தான் அதிக கெடுபிடி காட்டுவார்கள். ஆனால், வட கொரிய அதிபரோ தன் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்த கிம் ஜாங் உன்தான் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு ஒன்றில் அரசியல் நிகழ்வில் பங்கேற்ற முதல் வடகொரிய அதிபர். தன்னை பற்றிய எந்த ஒரு விஷயமும் எதிரிகள் வசம் பரவிவிடக் கூடாது என்பதில் கிம் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிங்கப்பூரில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தினங்களில் ஹோட்டல் கழிவறைகளை கிம் ஜாங் பயன்படுத்தவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

வடகொரிய அதிபர் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னரே இரு விமானங்கள் சிங்கப்பூர் வந்தன. உணவுப் பொருள்கள், உடைகள், குடிநீர், குண்டு துளைக்காத கார்கள் தனிக்கப்பலில் சிங்கப்பூர் வந்து இறங்கின. வடகொரிய அதிபரின் பயன்பாட்டுக்காக ரெடிமெட் டாய்லெட் ஒன்றும் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டது. சிங்கப்பூரில் கிம் ஜாங் இருந்த நாள்களில் இந்த டாய்லெட்டையே அவர்  பயன்படுத்தியுள்ளார். சிறுநீர், மலம் போன்றவற்றிலிருந்து எதிரிகள் தன் உடலில் உள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ள முடியும். இது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்காக கிம் ஜாங் ரெடிமேட் டாய்லெட் உடன் சிங்கப்பூர் வந்துள்ளார்.  

அதேபோல், சென்டோசா தீவு நட்சத்திர விடுதி உணவுகளை கிம் உண்ணவில்லை. ஜாங்கின் பிரத்யேக சமையல்காரர்களே கிம்முக்கு தேவையான உணவுகளைச் சமைத்துக் கொடுத்துள்ளனர். நட்சத்திர விடுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் கிம் மதிய விருந்து உட்கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது மட்டுமே சிங்கப்பூரில் அவர் வெளியாள் அளித்த உணவுகளை உட்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!