திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியாவின் முதல் படம், ‘கூடே’!

தமிழில் 'நேரம்', 'ராஜா ராணி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக இருந்தவர் நஸ்ரியா. மலையாளம், தமிழ் எனப் பிஸியாக இருக்கும்போதே ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு பை சொன்னார். திருமணத்துக்குப் பிறகு, நடிக்காமலே இருந்தவர் ரீ என்ட்ரி ஆகிறார் என்றவுடன் அவரின் ரசிகர்கள் உற்சாகமாகினர்.

நஸ்ரியா

இந்தப் படத்தை மலையாளத்தில் ஹிட் அடித்த `பெங்களூர் டேஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குகிறார். இதில் நஸ்ரியா, ப்ரித்விராஜ், பார்வதி ஆகியோர் நடிக்கின்றனர். உறவுகளைப் பற்றிய கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு 'கூடே' எனப் பெயரிட்டுள்ளனர். இதற்கிடையில் ப்ரித்விராஜும் பார்வதியும் இணைந்து நடித்துள்ள ‘மை ஸ்டோரி’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படமும் ரோஷினி தினகர் என்ற பெண் இயக்குநரின் படமே. நஸ்ரியா, தன் கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படம் ஒன்றை தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!