வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:18:20 (12/06/2018)

10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எப்போது? - தேதியை அறிவித்தார் செங்கோட்டையன்

2018-19-ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்வுகளின் தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

2018-19-ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்வுகளின் தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

செங்கோட்டையன்


பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பை தொடர்ந்து இந்தாண்டு 11-ம் வகுப்பு தேர்வுகளும் பொதுத்தேர்வாக நடத்தபட்டது. அதேபோல பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் இன்று அறிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2018-19-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் 1ம் தேதி தொடங்கி 19-ம் தேதிவரை நடைபெறும் என கூறினார். அதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதிவரை நடைபெறும் எனவும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 6-ம் தேதி தொடங்கி 22-ம் தேதிவரை நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுத்தேர்வு தேதியுடன், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியையும் அவர் வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதியும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியாகும் என அவர் கூறினார்.