காரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் - சிக்கிக்கொண்ட அரசு அதிகாரி!

போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி திண்டுக்கலில் மக்கள் தொடர்பு உதவி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி திண்டுக்கல்லில் மக்கள் தொடர்பு உதவி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மக்கள் தொடர்புத்துறை உதவி அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் அருண்குமார். இவர் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வத்தலக்குண்டிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரது காரை சோதனை செய்தனர்.  அப்போது அவரது காரில் தடைசெய்யப்பட்ட 251 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அருண்குமார், வத்தலக்குண்டைச் சேர்ந்த ரவி, ஸ்ரீராம் ஆகியோரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து பெற்றதாகத் தெரிகிறது. மேலும், அடுத்தகட்ட விசாரணை சென்னையில் நடைபெற்று வருகிறது. கஞ்சா எப்படி கொண்டுவரப்பட்டது,  யாரால் கொண்டுவரப்பட்டது, எப்படி கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

அரசு அதிகாரி ஒருவர் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!