``என் பிக்பாஸ் வாய்ப்பைப் பறித்தார்!" - நடிகர் நானி மீது ஶ்ரீரெட்டி பரபரப்பு புகார் | sri reddy complaints against actor nani

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (12/06/2018)

கடைசி தொடர்பு:19:30 (12/06/2018)

``என் பிக்பாஸ் வாய்ப்பைப் பறித்தார்!" - நடிகர் நானி மீது ஶ்ரீரெட்டி பரபரப்பு புகார்

சமீபகாலமாக தெலுங்குத் திரையுலகில் சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஶ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும் சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார். மேலும், நடிகர் ராணாவின் தம்பியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

நானி - ஶ்ரீ ரெட்டி

`இன்னும் நிறைய ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை விரைவில் வெளியிடுவேன்' என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் நானியின் மீது புகார் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ``நானி பெரிய ஹீரோ ஆவதற்கு முன்பே அவரை எனக்குத் தெரியும். `நான் பெரிய படம் பண்ணும்போது உன்னை லீட் ரோலில் நடிக்க வைக்கிறேன்' என்று கூறியிருந்தார். பின், எங்களுக்குள் நெருக்கம் அதிகமாகி அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்போது என்னை உடல்ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார். இன்று நானி பெரிய ஹீரோ. ஆனால்,  அவர் எனக்கு வாய்ப்பு வாங்கித்தரவில்லை. எனக்குப் பட வாய்ப்பு சரியானபடி இல்லாததால் பொருளாதார ரீதியாக நான் சிரமப்பட்டு வருகிறேன். 

அந்தச் சமயத்தில்தான், எனக்குத் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. நான் அதில் கலந்துகொள்வது 99% சதவிகிதம் உறுதியானது. இந்தத் தகவலை அந்த சேனல் நிர்வாகமே என்னிடம் கூறியது. ஆனால், திடீரென எனக்கும் அந்த சேனலுக்கும் தொடர்பு விட்டுப்போனது. அவர்கள் என்னைத் தொடர்புகொள்வதை தவிர்த்தனர். பிறகுதான், அந்த நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்குவது எனக்குத் தெரியவந்தது. எனக்குத் தெரிந்தவர்களிடம் என்னை ஏன் நீக்கினார்கள் ? என்று கேட்டேன். `உள்ளே அரசியல் நடந்திருக்கிறது' என்றனர். ஆக, என் வாய்ப்பை நானி பறித்துவிட்டார். நானியின் உண்மையான குணம் வேறு. `எம்.சி.ஏ' படத்தின்போது, சாய் பல்லவியே அவர்மீது புகார் கொடுத்துள்ளார். நானி என்னை வன்புணர்வு செய்யவில்லை என்று அவர் தன் மகன் மீது சத்தியம் செய்து சொல்லச் சொல்லுங்கள். பார்ப்போம் " என்று கூறியுள்ளார். 

நானி

இதுகுறித்து நானி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்து இருந்தார். அதில் அவர், ``யாரெல்லாம் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களை டார்கெட் செய்து தொந்தரவுக்கு ஆளாக்குகிறார்கள். நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் வாழும் இந்தச் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் இதைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். என்மீது பழி சுமத்திய காரணத்தால் நான் அவர்மீது அவதூறு வழக்கு  தொடரவிருக்கிறேன் " என்று பதிவிட்டிருக்கிறார். 

முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க