நிபா வைரஸ்: கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்களில் இயல்புநிலை திரும்புகிறது!

உயிர்பலி வாங்கிய நிபா வைரஸ் காரணமாக பீதியில் உறைந்திருந்த கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிவருகிறது.

யிர்பலி வாங்கிய நிபா வைரஸ் காரணமாக பீதியில் உறைந்திருந்த கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பிவருகிறது.

நிபா வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த மே மாதம் 19 -ம் தேதி நிபா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்தனர். பழம்தின்னி வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. நிபா வைரஸ் கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டு மாவட்டங்களிலும் மாநிலச் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தெருக்களில் நடமாடவே மக்கள் அச்சப்பட்டனர். அப்படி அவசர தேவைக்காகத் தெருக்களில் செல்பவர்களும் முகத்தில் மாஸ்க், கையுறையுடன் வலம்வந்தனர். நிபா வைரஸ் தாக்கம் குறித்து சுட்டிக்காட்டும் விதமாகக் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. கேரள சட்டசபை கூட்டத்தொடருக்கு மாஸ்க், கையுறையுடன் வந்து பரபரப்பைக் கிளப்பினார். நோயாளிகளை பராமரித்த நர்ஸ்சுகள் உட்பட சுமார் 20 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் இறந்துள்ளனர். இதனால் கோடை விடுமுறை முடிந்தும் கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன.

நிபா வைரஸ்

இந்த நிலையில் நிபா வைரஸ் தாக்கம் குறைந்து மலப்புறம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மலப்புறம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று முதல் செயல்படத் தொடங்கின. நிபா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த இரண்டு மாவட்டங்களிலும் படிப்படியாக இயல்புநிலை திரும்பிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!