மணியரசன் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் போராடியவர்கள் சென்னையில் கைது!

மருத்துவமனையில் பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரியும் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி தலைமைவகித்தார். இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னைப் பொறுப்பாளர் தபசி குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் சீராளன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன், மனிதி இயக்கத்தின் செல்வி, பச்சைத் தமிழகம் கட்சியின் அருள்தாஸ், எழுத்தாளர் அய்யநாதன், எழுகதிர் அருகோ, பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள். 

தொடர்ச்சியாகப் போராட்டக்காரர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யமுயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!