கணினிமயமாக்கப்படும் சிலை தகவல்கள்; சிலை கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு கருதி அளவிடு செய்யப்பட்டது.

சிலை

தமிழகத்தில் உள்ள  கோயில்களில் இருக்கும் பழைமை வாய்ந்த  ஐம்பொன் சிலைகள் ஆங்காங்கே கொள்ளையர்களால்  திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நூதன முறையில் ஐம்பொன் சிலைகளைத் திருடிவிட்டு அதற்குப் பதிலாக அதேபோன்று இரும்பால் ஆன சிலைக்கு ஐம்பொன் தங்க முலாம் பூசப்பட்ட வேறு சிலையை அங்கு வைத்துவிடுகின்றனர். இதுபோன்ற நூதன திருட்டில் இருந்து சிலைகளைக் காப்பதற்காகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள ஐம்பொன் உற்சவர் சிலைகள் அளவீடு செய்யப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையராகப் பொறுப்பேற்ற ஞானசேகர் தலைமையில் இந்தப் பணி துவங்கியது. ``கோயிலில் உள்ள அனைத்து ஐம்பொன் சிலைகளும் அளவீடு செய்யப்பட்டது. சிலையின் உயரம், அகலம், சிலையின் எடை, சிலையின் வடிவம், சிலையின் நிறம், ஆகியவை அளவீடு செய்து அதைச் சரிபார்த்து கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சிலைகள் காணாமல் போனால் கண்டுபிடிக்கவும், சிலை மாறாட்டம்  நடக்காமல் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!