வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (13/06/2018)

கடைசி தொடர்பு:14:24 (13/06/2018)

விஜய் சேதுபதியின் `ஜுங்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

`காஷ்மோரா’ இயக்குநர் கோகுலின் அடுத்த திரைப்படம் `ஜுங்கா.’ விஜய் சேதுபதி, சயீஷா, மடோனா செபஸ்டின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. 

விஜய் சேதுபதி


கோகுல், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' காமெடி திரைப்படமாக ஹிட் அடித்தது. அதனால் `ஜுங்கா' படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார். மேலும், பாதி படப்பிடிப்பை பாரீஸில் நிறைவு செய்திருக்கிறது படக்குழு. சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க