வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (13/06/2018)

கடைசி தொடர்பு:14:23 (13/06/2018)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்கு! `மந்திரி தந்திரி’யின் ஒரு ரீவைண்ட்

`ஆனந்த விகடன்’ இதழில் `மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அதில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பற்றி எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்!

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அந்த மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் உள்ளார். இவர் மீது மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி. தவிர திருத்தங்கலில் 2 வீட்டுமனைகளும் நிலமும் வாங்கியுள்ளார். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இப்படி வருமானத்துக்கு அதிகமாகப் பல கோடி ரூபாய்க்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள இவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று  கூறி இருந்தார். 

ராஜேந்திர பாலாஜி

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு உள்ளனர். அமைச்சரவையில் உள்ள ஒருவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.க-விலிருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்ட பிறகு, ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நாம ஒருவருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை. ஒபாமாவே வந்தாலும் சரி, ட்ரம்ப்பே வந்தாலும் சரி நமக்குப் பயமே கிடையாது, ஏன்னா நமக்கு மோடி இருக்கார். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார். ஆமாம்... எல்லாம் மேல உள்ளவன் பார்த்துக்குவான். ஏன்னா டெல்லி நம்மக்கிட்ட இருக்கு...’ என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த ராஜேந்திரபாலாஜி முந்தைய அ.தி.மு.க அரசில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக இருந்தார். அப்போதே இவர்மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. அன்றைய அ.தி.மு.க அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அன்று ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘மந்திரி தந்திரி’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அதில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பற்றி எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்!

'மந்திரி தந்திரி' அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி  கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்!

மந்திரி தந்திரி