வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (13/06/2018)

கடைசி தொடர்பு:14:21 (13/06/2018)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் பழுது; 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டதால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.


420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

இந்தியாவின் பழைமையான அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையமும் ஒன்றாகும். நிலக்கரி அடிப்படையிலான இத்துறைமுகம், கடந்த 1979-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் நாள் ஒன்றுக்கு 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் உள்ள முதல் மூன்று யூனிட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவைத் தாண்டியும் இயங்கி வருகிறது. இதனால், இவற்றில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி தடைப்பட்டு வருகிறது. சில சமயம், தண்ணீர் பற்றாக்குறையாலும் மின் உற்பத்தி தடைப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2வது யூனிட்டில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 3வது யூனிட் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 420 மெகாவாட்  மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. பழுதை சரி செய்யும் முயற்சியில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க